2022-23ம் ஆண்டில் 4.8 லட்சம் பேருக்கு கல்வி வழங்க திட்டம்... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சூப்பர் தகவல்!!

By Narendran S  |  First Published Oct 12, 2022, 7:03 PM IST

2022-23 ஆம் ஆண்டில் 4.8 லட்சம் பேருக்கு கல்வி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


2022-23 ஆம் ஆண்டில் 4.8 லட்சம் பேருக்கு கல்வி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.9.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேனி மாவட்டம் கம்பத்தில் களை கட்டிய இரட்டை மாட்டுவண்டி பந்தயம்!!

Tap to resize

Latest Videos

இதன் காரணமாக 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்களை பள்ளி மாணவர்களின் உதவியுடன் கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22 ஆம் ஆண்டில் எழுத, படிக்க தெரியாத 3 லட்சம் பேருக்கு கல்வி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 3.10 லட்சம் பேருக்கு கல்வி வழங்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் 4.8 லட்சம் பேருக்கு கல்வி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை 5 லட்சமாக ஆக்க வேண்டும்.

இதையும் படிங்க: சேலம் - கோவை தினசரி பயணிகள் ரயில்.. 18 நாட்களுக்கு ரத்து.. என்ன காரணம் தெரியுமா..?

2025 ஆம் ஆண்டுக்குள் கல்வி கற்றவர்களின் சதவீதத்தில் தமிழகம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பது முதல்வரின் ஆசை. வயதானவர்கள் கல்வியறிவு இல்லாததால் கையெழுத்தோ அல்லது கைநாட்டோ போடுவதால் பலவித இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதை தடுக்கவே இந்த இயக்ககம் மூலம் கல்வி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை சமுதாயத்திற்கு ஆற்றும் கடமையாக ஆசிரியர்கள் கருதி செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

click me!