
நாமக்கல்
நாமக்கல்லில் பிப்ரவரி 15-ல் 1008 சிவலிங்க பூஜை நடத்துவது குறித்து நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், சிவலிங்க வழிபாட்டின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தேசிய சிந்தனை பேரவைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமைத் தாங்கினார். துணைத் தலைவர்கள் குமரவேல், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், “பிப்ரவரி 15--ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் , பெரிய பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் 1008 குடும்பங்கள் பங்கு பெறும் 1008 சிவலிங்க பூஜை சிறப்பாக நடத்துவது,
காஞ்சி மஹா பெரியவரின் 125-வது ஜெயந்தியை முன்னிட்டு, அவரது உருவப்படத்தினை திறந்து வைக்கவும்,
பூஜையில் அகில பாரதிய துறவியர் பெருமக்களை அழைப்பது,
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் பிப்ரவரி 22-ம் தேதி தங்கத் தேரோட்டம் நடத்துவது” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.