தமிழகத்தில் ஆப்ரிகன் பன்றி காய்ச்சல்; வளர்ப்பு பன்றிகளை விற்க தடை

By Velmurugan sFirst Published Jan 6, 2023, 10:07 AM IST
Highlights

தமிழகம், கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளில் காட்டுப் பன்றிகள் ஆப்ரிகன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்பு பன்றிகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்கோத்தகிரி, கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர், உதகை மற்றும் முதுமலை புலிகள்  காப்பகம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த காட்டு பன்றிகள் கடந்த ஒரு மாத காலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன. சுமார் 200க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்துள்ளன. 

ஆளுநர் ரவியின் கருத்துக்கு எதிர்ப்பு; இந்திய அளவில் டிரெண்டான “தமிழ்நாடு”

இதே போல் தமிழகத்தை ஒட்டிய கேரளா, கர்நாடகா மாநில வனப்பகுதிகளிலும் காட்டு பன்றிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த காட்டுப் பன்றிகளின் முக்கிய உடல் உறுப்புகளை ஆய்வு செய்த அதிகாரிகள், இந்த பன்றிகள் அனைத்தும் ஆப்ரிகன் பன்றி காய்ச்சலால் பாதித்து உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரீத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காட்டு பன்றிகள் ஆப்ரிகன் பன்றி காய்ச்சலால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் மற்ற வன விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ பரவ வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

புத்தகப் பிரியர்களே தயாரா.? சென்னையில் இன்று தொடங்குகிறது புத்தக கண்காட்சி..! எத்தனை நாட்கள் நடைபெறுகிறது.?

இதனிடையே கூடலூர் வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “காட்டுப் பன்றிகள் தொடர் உயிரிழப்பு சம்பவம் சீரடையும் வரை நீலகிரியில் வளர்ப்பு பன்றிகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர். 

click me!