ஆளுநர் ரவியின் கருத்துக்கு எதிர்ப்பு; இந்திய அளவில் டிரெண்டான “தமிழ்நாடு”

By Velmurugan s  |  First Published Jan 6, 2023, 9:36 AM IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்று கூறுவதற்கு பதிலாக தமிழகம் என்று கூறுவதே பொறுத்தமாக இருக்கும் என்று கூறியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்திய அளவில் தமிழ்நாடு என்ற வார்த்தை ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.


தமிழகத்திற்கும், காசிக்கும் இடையேயான ஆண்மீக ஒற்றுமையை அனைவரும் அறியும் வகையில் மத்திய அரசு சார்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு சுமார் 1 மாத காலம் நடைபெற்றது. காசி தமிழ் சங்கமம் விழா சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்களை கௌரவிக்கும் விதமாக சென்னை கிண்டியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார்.

ஆளுநர் பேசுகையில், இந்தியா முழுவதும் ஒரு திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தமிழகம் மட்டும் அதனை வேண்டாம் என்கிற நிலைப்பாட்டை எடுக்கிறது. தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று கூறுவதே பொறுத்தமாக இருக்கும் என்று பேசியிருந்தார். ஆளுநரின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Latest Videos

இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம்..! இங்கே மட்டும் எதிர்கிறார்கள்.! தமிழ்நாடு நோ.! தமிழகம் ஓகே-ஆர் என் ரவி

மேலும் மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி ட்விட்டரில் இந்திய அளவில் “தமிழ்நாடு” என்ற வார்த்தை டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல் - மொழியியல் - அரசியல் - பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தகப் பிரியர்களே தயாரா.? சென்னையில் இன்று தொடங்குகிறது புத்தக கண்காட்சி..! எத்தனை நாட்கள் நடைபெறுகிறது.?

இதே போல் திமுக துணைபொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள பதிவில் “நம் மொழி - பண்பாடு - அரசியல்-வாழ்வியலின் அடையாளம்  “தமிழ்நாடு”. அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!