பிளிப்கார்ட் நிறுவனத்தில் போலி முகவரியில் செல்போன் ஆர்டர் கொடுத்து நூதன மோசடி… 2 ஊழியர்கள் தலைமறைவு…

 
Published : Jun 17, 2017, 08:10 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
பிளிப்கார்ட்  நிறுவனத்தில் போலி முகவரியில் செல்போன் ஆர்டர் கொடுத்து நூதன மோசடி… 2 ஊழியர்கள் தலைமறைவு…

சுருக்கம்

philipcart company celphone cheating

பிலிப்கார்ட் நிறுவனத்தில் போலி முகவரியில் செல்போன் ஆர்டர் கொடுத்து நூதன மோசடி… 2 ஊழியர்கள் தலைமறைவு…

பிலிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து பார்சலில் வந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  6 விலை உயர்ந்த செல்போன்களை நூதன முறையில் திருடியதாக டெலிவரி செய்யும் ஊழியர்கள் 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பிலிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் டெலிவரி நிறுவனமான ஸ்டார் வாக் தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில்  டெலிவரி ஊழியராக பணி புரிந்துவந்தவர் ஜெய்கணேஷ் , இவர் பிலிப்கார்ட்டில் போலி பெயரில் இல்லாத முகவரியை கொடுத்து 6 மொபைல் போன்களை ஆர்டர் செய்துள்ளார்.

டெலிவரிக்காக அந்த ஸ்மார்ட் போன்கள் அவரிடம் வந்ததும் அவர் தனது நண்பர் சாம் திவாகருடன் சேர்ந்து பார்சலில் வந்த போன்களை திருடிவிட்டு அதற்கு பதில் பார்சலில் டம்மி செல்போனையும், மீதம் உள்ள பார்சல்களில் உப்பு பொட்டலங்களையும் வைத்து பார்சலை பிரிக்காதது போல் வடிவமைத்துள்ளார்.

இதையடுத்து ஆர்டர் கொடுத்த வாடிக்கையாளர்களின்  முகவரியில் ஆட்கள் இல்லை என்று மீண்டும் அந்த செல்போன்களை பிலிப்கார்ட் நிறுவனத்துக்கு அந்த பார்சல்களை திருப்பி அனுப்பி உள்ளனர்..

இந்த மோசடி குறித்து பிலிப்கார்ட் மற்றும் ஸ்டார் வாக் நிறுவனங்கள் சார்பில் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்த இந்த நூதன ஸ்மார்ட் போன் கொள்ளை வழக்கில் தொடர்புடைய  ஜெய்கணேஷ், அவரது நண்பர் எண்ணூரை சேர்ந்த சாம் திவாகர் ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மோசடி செய்யப்பட்ட இந்த 6 செல்போன்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 23 December 2025: தொகுதி பங்கீடு.. எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பாஜக பேச்சுவார்த்தை
தமிழ்நாடு என்ற பெயர் திமுகவிற்கு கசக்கிறதா..? இது தான் நீங்கள் தமிழை வளர்க்கும் முறையா..? சீமான் கேள்வி