ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவு 6 கோடி ரூபாய்….அதிமுக சசிகலா அணி சார்பில் வழங்கப்பட்டது…

 
Published : Jun 17, 2017, 07:41 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவு 6 கோடி ரூபாய்….அதிமுக சசிகலா அணி சார்பில் வழங்கப்பட்டது…

சுருக்கம்

jayalalitha medical expenses 6 crore rupees paid by admk

ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவு 6 கோடி ரூபாய்….அதிமுக சசிகலா அணி சார்பில் வழங்கப்பட்டது…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான செலவு , ஆறு கோடி ரூபாயை, அதிமுக  சசிகலா அணி சார்பில்  அப்பல்லோ மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

முதலமைச்சர்  ஜெயலலிதா  உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  22 ஆம் தேதி  சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 இரண்டு மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்றும் பலனின்றி, கடந்த டிசம்பர் , 5ம் தேதி  மரணமடைந்தார். அவருக்கு அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை அளித்ததற்காக 6 கோடி ரூபாய் செலவானதாக அறிவிக்கப்பட்டது. இந்த செலவு தொகை  ஆறு கோடி ரூபாயை அரசு ஏற்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில், அதிமுக  தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவான, ஆறு கோடி ரூபாயை, கட்சி நிதியில் இருந்து வழங்க, முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, ஆறு கோடி ரூபாய்க்கான காசோலை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது. அவர் அதை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்.

 

PREV
click me!

Recommended Stories

அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!
அமெரிக்க வரி விதிப்பால் சிக்கலில் தமிழகத்தின் ஏற்றுமதித்துறை.. பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்