முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், இயற்பியல் உள்ளிட்ட 15 பாடங்களுக்கான தற்காலிகத் தெரிவுப்பட்டியலை டிஆர்பி வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டும் செப்டம்பர் 9 ஆம் தேதி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்,உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை - 1 ஆகிய பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கணினி வழித் தேர்வுகள் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதனையடுத்து, அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பாடங்களுக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்ட 1:2 விகிதாசாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து செப். 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை ஆள்சேர்ப்பு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது.
மேலும் படிக்க:ஆசிரியர்கள் பணி நியமனம்.. தற்காலிக ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளயீடு.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு
இதனிடையே கடந்த 11 ஆம் தேதி முதற்கட்டமாக புவியியல், வரலாறு, இயற்பியல் ஆகிய மூன்று பாடங்களுக்கு தற்காலிக தெரிவுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது பொருளியல், கணிதம், கணினி அறிவியல், ஆங்கிலம், தமிழ், உடற்கல்வி, வணிகம், தாவரவியல், விலங்கியல், வேதியியல், அரசியல் அறிவியல், வீட்டு அறிவியல் ஆகிய படங்களுக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வாணையத்தின் trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்காலிகத் தெரிவுப்பட்டியலில் இடம் பெற்றுள்ல withheld for want of certificate எனக் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வர்கள் உடனடியாக 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தங்களது சான்றிதழ்களை நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:ரூ.2.50 லட்சம் மாத சம்பளத்தில் இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணி.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு