இன்றும் வாகன ஓட்டிகளை ‘அலற’ விட்ட பெட்ரோல் விலை… டீசல் விலையும் உச்சத்தில்..!

Published : Oct 06, 2021, 07:41 AM IST
இன்றும் வாகன ஓட்டிகளை ‘அலற’ விட்ட பெட்ரோல் விலை… டீசல் விலையும் உச்சத்தில்..!

சுருக்கம்

சென்னையில் பெட்ரோல், டீசல் இன்றும் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளன.

சென்னை:  சென்னையில் பெட்ரோல், டீசல் இன்றும் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருவதில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 2வது வாரத்தில் இருந்து விலை குறைந்தாலும் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

தொடர்ந்து விலை சரியும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்திருந்த தருணத்தில் விலையோ எகிற ஆரம்பித்தது. செப்டம்பர் 28ம் தேதியில் இருந்து விலையேற்றம் காணப்பட்டது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து விலை அதிகரித்து வந்த காரணத்தால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை கடந்தது. இந் நிலையில் பெட்ரோல் விலையும் யாரும் எதிர்பார்க்காத வகையில் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ. 100.49 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

டீசல் விலையும் ஒரு லிட்டர் 34 காசுகள் உயர்ந்து ரூபாய் 95. 93 காசுகளாக உள்ளது. இந்த புதிய விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தொடரும் விலையேற்றத்தால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: ரெனால்ட் விற்பனை படுஜோரு.. முதலிடத்தில் எந்த மாடல்? ரேட்டை கேட்டா வாங்கிடுவீங்க!
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!