தண்ணி காட்டும் T23… புலியை பிடிக்க ‘ரூட்டை’ மாற்றிய வனத்துறை…

By manimegalai aFirst Published Oct 5, 2021, 8:46 PM IST
Highlights

கூடலூர் ஆட்கொல்லி புலியை பிடிக்க வியூகத்தை மாற்றி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடலூர் ஆட்கொல்லி புலியை பிடிக்க வியூகத்தை மாற்றி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கடந்த சில நாட்களாக ஆட்கொல்லி புலி ஒன்று 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொன்றுள்ளது. மனிதர்கள் 4 பேரும் புலியால் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து ஆட்கொல்லி புலியை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர். நிலைமை சீரியசானதை அடுத்து ஆட்கொல்லி புலியை பிடிக்கும் நடவடிக்கைகளில் தமிழக மற்றும் கேரள வனத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கினர்.

ட்ரோன்கள் மூலமாக புலி எங்கே இருக்கிறது என்று கண்காணிக்கப்பட்டது. உயர்ந்த பரண்கள் அமைத்தும், யானைகள் மீது ஏறியும் புலி தென்படுகிறதா என்று முயற்சிகள் எடுக்கப்பட்டன.

மேலும், அதிகளவு கால்நடைகளை வனத்தினுள் அனுப்பி புலியை வெளியில் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தனை முயற்சிகளுக்கு பின்னாலும் ஆட்கொல்லி புலி சிக்காமல் ஆட்டம் காட்டி வருகிறது,

இதையடுத்து புலியை பிடிக்கும் வியூகத்தை மாற்றி உள்ளதாக வனத்துறையினர் கூறி உள்ளனர். விரைவில் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். பனி அதிகமாக இருப்பதால் தேடுதல் வேட்டையில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

click me!