
சென்னை: இந்தாண்டு தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 28 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.
எத்தனை சிரமங்கள் வந்தாலும் விசேஷங்கள், பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு போவது என்பதே அலாதி இன்பம். இந்த ஆண்டு அப்படித்தான் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். அதுவும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி என்பதால் சொந்த ஊர் பயணங்களுக்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
அவர்களுக்கு வசதியாக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந் நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர்களில் பேருந்துகளில் செல்வோருக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 28 ஆயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு போக திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறையினர் கூறி உள்ளனர். பேருந்துகள் போதாத பட்சத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் நிலைமையை பொருத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.