பேனருக்கு முற்றிலும் தடை விதிக்க உத்தரவு.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..!

Published : Oct 05, 2021, 06:57 PM ISTUpdated : Oct 05, 2021, 06:59 PM IST
பேனருக்கு முற்றிலும் தடை விதிக்க உத்தரவு.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..!

சுருக்கம்

கடந்த 2019-ம் ஆண்டே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் எனக் கூறி உள்ளதாகவும், கட்சித் தொண்டர்களை பேனர்கள் வைக்கக் கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மாவட்டங்களுக்கும், தாலுக்கா நீதிமன்றங்களுக்கும் தான் சென்றபோது ஏராளமான பேனர்களைப் பார்த்ததாகவும் தெரிவித்தார். 

தமிழகத்தில் முழுமையாக பேனர்களுக்கு தடை விதிக்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி விழுப்புரத்தில் மாம்பழப்பட்டு பகுதியில் திமுக நிர்வாகி பொன்குமார் என்பவரின் இல்ல திருமண விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இவரை வரவேற்பதற்காக மாம்பழப்பட்டு சாலையில் பல்வேறு இடங்களில் திமுக கொடிக்கம்பம் நடப்பட்டு அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கொடிக்கம்பம் நடும் பணியில் விழுப்புரம் ரஹீம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் தினேஷ்(12) என்ற சிறுவனும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். சிறுவன் நட்ட கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையும் படிங்க;- அக்காவால் நின்று போன திருமணம்.. மனவேதனையில் குன்றத்தூர் அபிராமியின் தம்பி தற்கொலை..!

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடிக் கம்பங்கள், பேனர்கள் வைக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, இந்தக் கொடிக் கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், இது தொடர்பான ஒரு வழக்கில், திமுக தரப்பில் பேனர்கள் வைக்கப்படமாட்டாது என்று உத்தரவாதம் அளித்து, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேனர்கள் வைப்பதற்கு ஒப்பந்தம் பெற்றிருந்த ஒப்பந்ததாரர்தான் 12 வயது சிறுவனைப் பணியில் அமர்த்தி இருக்கிறார். இந்தச் சம்பவத்தை அடுத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாக ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க;- வீடியோ காலில்.. நிர்வாணம்.. ஆபாச பேச்சு.. வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்.. வைரலாகும் அந்தரங்க புகைப்படங்கள்.!

மேலும், கடந்த 2019-ம் ஆண்டே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் எனக் கூறி உள்ளதாகவும், கட்சித் தொண்டர்களை பேனர்கள் வைக்கக் கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மாவட்டங்களுக்கும், தாலுக்கா நீதிமன்றங்களுக்கும் தான் சென்றபோது ஏராளமான பேனர்களைப் பார்த்ததாகவும் தெரிவித்தார். பின்னர், பேனர்கள் வைப்பதை முழுமையாகத் தடை செய்யும் வகையில், உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்குத் தொடர்பாக தமிழக அரசு, திமுக 6 வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் ஒத்திவைத்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை