கல்லூரிகளுக்கு திடீர் லீவு விட்ட அண்ணா பல்கலைக்கழகம்…! காரணம் இதுதான்…

Published : Oct 05, 2021, 07:47 PM IST
கல்லூரிகளுக்கு திடீர் லீவு விட்ட அண்ணா பல்கலைக்கழகம்…! காரணம் இதுதான்…

சுருக்கம்

உள்ளாட்சி தேர்தல் காரணமாக பொறியியல் கல்லூரிகளுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது.

சென்னை: உள்ளாட்சி தேர்தல் காரணமாக பொறியியல் கல்லூரிகளுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்ட நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஸ்திரமாக உள்ளது.

டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நாள் அன்று பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள மாவட்டங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில் நாளையும், வரும் 9ம் தேதிய உள்ளாட்சி தேர்தல் காரணமாக பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறையை அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மட்டுமல்லாது வளாக கல்லூரிகள், இணைப்பு கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!
தவெகவில் இணைந்த பெலிக்ஸ் ஜெரால்டு! சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய விஜய்! தவெகவினர் குஷி!