சிதம்பரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு 3 பேர் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு 3 பேர் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் சிவசங்கர் என்பது பணியில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 3 பேர் தங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளனர். பணத்தை கொடுத்துவிட்டு சில்லறை வாங்கிய போது பைக்கில் உட்கார்ந்திருந்த ஒருவர் சிவங்கர் கையில் பணப்பையை பிடுங்கியுள்ளார்.
ஆனால் சிவசங்கர் பண பையை விடாமல் பிடித்துக்கொண்டார். அந்த நபர் கீழே இறங்கி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவசங்கரை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவசங்கர் படுகாயமடைந்த நிலையில் பணப்பையை பறித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது. உடனே இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைபோன பணம் 5 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காயமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.