கஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்!

By vinoth kumar  |  First Published Dec 5, 2018, 5:42 PM IST

மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகள் இன்னும் மீளாத் துயரில் தத்தளிக்கிறது. இந்நிலையில் கஜா புயலில் பாதித்த 14 குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக கடலூர் கவிதாலயா தியேட்டரில் திண்பண்டங்கள் விற்பனை செய்தும், அந்தப் பகுதியில் மூட்டைத் தூக்கி அதில் கிடைத்த தொகையையும் கஜா புயலில் பாதித்தவர்களுக்காக அளித்துள்ளார் நடிகர் விஷால்.

இது வரும் ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் ‘சன் நாம் ஒருவர்’ நிகழ்ச்சியில் வரவிருக்கிறது.  இந்நிகழ்ச்சியில் இதுவரை வாரம்  ஒரு நபருக்கு மட்டுமே உதவி என்ற வரிசையில் நடைபெற்று வந்தது. ஆனால் வரும் வாரம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு உதவி செய்யும் அத்தியாயம் வர உள்ளது. நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களின் பரிதாப நிலை குறித்தும் பேசுகிறார்கள்.

Tap to resize

Latest Videos

நடிகர் விஷால் நடத்தும்  இந்த நிகழ்ச்சியில்  இந்த வாரம் சமுத்திக்கனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதை கேட்டு கண்ணீர் வடித்ததோடு, ‘‘கஜா புயல் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களை திண்றுவிட்டது. இது ஏதோ வேறு ஒரு நாட்டில் நடந்ததைப் போல இப்போதும் பலர் நினைப்பதுதான் வேதனையாக இருக்கிறது!’’ என்றார்.

click me!