உச்சக்கட்ட களேபரத்தில் அதிமுக.. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படுமா..? பிற்பகல் 3 மணிக்கு விசாரணை..

Published : Jun 22, 2022, 01:47 PM ISTUpdated : Jun 22, 2022, 01:48 PM IST
உச்சக்கட்ட களேபரத்தில் அதிமுக.. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படுமா..? பிற்பகல் 3 மணிக்கு விசாரணை..

சுருக்கம்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம், இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரிக்க உள்ளது.   

அதிமுகவில் ஒன்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது. நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒன்றை தலைமை குறித்து தீர்மானம்  நிறைவேற்றப்படவுள்ளதாக ஈபிஎஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பட்டது. மேலும் நாளை நடைபெறவுள்ள பொதுகுழுவில் உறுப்பினர்கள் யாரும் கலந்துக்கொள்ள கூடாது என்று அவர் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க:EPS Vs OPS : எடப்பாடி மாஸ்டர் பிளான்.. மெரினா ரெடி.! தர்மயுத்தத்துக்கு தயாரான ஓபிஎஸ் !

இதனிடையே அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேபோல் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல தணிகாச்சலம் என்பவரும் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் முறையீடு செய்தார்.  இதையடுத்து, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து அனைத்து வழக்குகளும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.
மேலும் படிக்க: பொதுக்குழுவுக்கு வாருங்கள்.. பேசி தீர்த்துக் கொள்ளலாம்.. OPS-க்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு..!!

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!