நாளை ஆனி மாத பிரதோஷம்.. சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் நான்கு நாட்களுக்கு செல்ல அனுமதி..

By Thanalakshmi VFirst Published Jun 25, 2022, 5:53 PM IST
Highlights

ஆனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல ஜூன் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

ஆனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல ஜூன் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு மாத பிரதோசமும், அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அன்று பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தருவர். மேலும் அந்த நாட்களில் மட்டும் தான் மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். 

மேலும் படிக்க: திடீர் சூறாவளி காற்று.. 14 அடிக்கு பொங்கி எழுந்த ராட்சத அலை.. கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை..

அந்த வகையில் ஆனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல ஜூன் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் நான்கு நாட்களுக்கு மலைகோயிலுக்கு பக்தர்கள் செல்லலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: மதுரை பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்..சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு..கடையை இழுத்து மூடிய அதிகாரிகள்

click me!