பெரியார் சிலை வைக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்குடியில் வீட்டின் சுற்றுச் சுவருக்குள் அமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெரியார் சிலையை அகற்றிய டிஎஸ்பி மற்றும் வருவாய் துறை வட்டாட்சியரை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தனது வீட்டில் பெரியாரின் மார்பளவு சிலையை அமைத்திருந்தார். இதை திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைக்க இருந்திருந்தார். இதனிடையே, பெரியார் சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகிகள் சிலர் பள்ளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க..DMK: நல்ல பீஸா அனுப்பு.. பெண் புரோக்கரிடம் ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி - வைரல் ஆடியோ கிளப்பிய சர்ச்சை
இதையடுத்து, காவல்துறையினர் பாதுகாப்புடன், இளங்கோவனின் வீட்டில் இருந்த பெரியார் சிலையை வருவாய் துறையினர் அகற்றினர். இதுகுறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, அனுமதி பெறும் வரை சிலையை எடுத்து வைக்குமாறு இளங்கோவனிடம் அறிவுத்தியும், அவர் எடுத்து வைக்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனால், அரசு விதிகளின்படி, சிலை அகற்றப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டில் நிறுவப்பட்ட பெரியார் சிலையை அகற்றிய வட்டாட்சியர் கண்ணன், டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க..Erode East bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி - யார் இந்த மேனகா.?
காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன் சிவகங்கை வனத்திட்ட அலுவலராக பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காரைக்குடியில் பெரியார் சிலையை நிறுவ கடைப்பிடிக்க வேண்டிய சட்டவிதிகளை சரியாக புரிந்துகொள்ளாமல் சிலையை அகற்றியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..உத்திரமேரூர் கல்வெட்டு உலகமே வியக்கிறது.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் !!
இதையும் படிங்க..பிபிசி ஆவணப்படம்.. அதானி! நீட்! இலங்கை - திமுக எம்பிக்களுக்கு அறிவுரை செய்த முதல்வர் ஸ்டாலின்!