#Breaking : TN Govt : டிச.31 முதல் ஜன.1 வரை கடற்கரைக்கு செல்ல தடை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Published : Dec 13, 2021, 10:26 PM IST
#Breaking : TN Govt : டிச.31 முதல் ஜன.1 வரை கடற்கரைக்கு செல்ல தடை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

சுருக்கம்

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. டிசம்பர் 31 முதல் ஜனவர் 1ஆம் தேதி வரை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களுக்கு கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி ஆம் தேதி முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையின்றி வழக்கம்போல் செயல்படும் என்றும், கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும் என்றும், ஊரடங்கு காரணமாக மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதால் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி எனவும் அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அண்டை மாநிலங்களில் ஒமிக்ரான் பரவி வருவதால் மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!