ஐட்ரோகார்பனை எதிர்த்து போராட்டக் களத்தில் செடிகளை நட்டு மக்கள் போராட்டம்; இது நெடுவாசல் 120…

First Published Aug 10, 2017, 8:12 AM IST
Highlights
People plant the plants in struggle field against hydrocarban


புதுக்கோட்டை

ஐட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தி பசுமையை அழித்துவிட வேண்டாம் என்பதை வலியுறுத்தும் விதமாக 120-வது நாளான நேற்று நெடுவாசல் போராட்டக் களத்தில் செடிகளை நட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ளது நெடுவாசல். இந்த நெடுவாசல் உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஐட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனைக் கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ஆம் தேதி தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கி 100 நாள்களைக் கடந்து இன்று வரை நடத்தி வருகின்றனர்.

நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 120–வது நாளாக நேற்றும் போராட்டம் நடைப்பெற்றது.

அதில், ஐட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு திட்டத்தை ரத்து செய்ய அப்பகுதி மக்கள் அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் பல்வேறு முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, நெடுவாசலில் ஐட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தி பசுமையை அழித்துவிட வேண்டாம் என்பதை வலியுறுத்தும் விதமாக 120-வது நாளான நேற்று போராட்டக் களத்தில் செடிகளை நட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.

click me!