நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியல் செய்த மக்கள்; தோண்டிய பள்ளத்தை மூட வலியுறுத்தல்...

 
Published : Dec 05, 2017, 08:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியல் செய்த மக்கள்; தோண்டிய பள்ளத்தை மூட வலியுறுத்தல்...

சுருக்கம்

People in the road blockade condemning municipal management Emphasize to shut the pit

சிவகங்கை

சிவகங்கையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பணிகள் முடிந்தும் மூடப்படாமல் உள்ளதால் கடுப்பான மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சியில், ரூ. 125 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளுக்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு 25-வது வார்டுக்கு உள்பட்ட பூங்காவனத்தம்மன் கோயில் தெருவில் மூன்று இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் உடைந்து சுமார் 7 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது.

மேலும், அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் நீர், குடிநீரில் கலந்துள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அவ்வழியாகச் சென்ற சிறுவன் அந்த பள்ளத்தில் தவறி விழுந்ததாகவும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்தச் சிறுவனை மீட்டனர்.

இந்த ஆபத்தான பள்ளத்தை மூடும்படி, நகராட்சிக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சின்னக்கடை சந்திப்பில் உள்ள திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அசோக்குமார் மற்றும் நகரக் காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர், ஆணையர் (பொறுப்பு) அசோக்குமார் பாதாள சாக்கடை திட்டப்பணி மேலாளரை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், உடைந்த குழாய்கள் சரிசெய்யப்பட்டன.

PREV
click me!

Recommended Stories

ஓரங்கட்டப்பட்ட ஓடி ஓடி வேலை செய்த அஜிதா அஃனஸ்..! தவெகவில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் நிர்வாகி
இளைஞர்களின் வாக்கை பறிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட திமுக.. எங் லுக்கில் மாஸ் காட்டும் ஸ்டாலின் #VibeWithMKS