ஒகி புயலின் கோர தாண்டவம்… சீரமைப்பு பணிகளுக்காக குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும்,நாளையும் விடுமுறை !!!

 
Published : Dec 05, 2017, 08:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
ஒகி புயலின் கோர தாண்டவம்… சீரமைப்பு பணிகளுக்காக குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும்,நாளையும் விடுமுறை !!!

சுருக்கம்

today and tommorrow school leave for kanniyakumar district

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்றும் நாளையும் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மாத இறுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.

இதனை தொடர்ந்து துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார்.  இதேபோன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கன்னியாகுமரிக்கு வருகை தந்து சீரமைப்பு பணிகள் பற்றி ஆய்வு செய்து சென்றார்.

கன்னியாகுமரியில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.  இந்நிலையில், புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நிறைவடையாத நிலையில் கன்னியாகுமரியில் இன்றும் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சஜன்சிங் சவான் அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

என்ன ஒரு தைரியம்! கடலுக்குள்ள 20 அடி ஆழத்துல பரதநாட்டியம் ஆடிய புதுச்சேரி சுட்டி!
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு