
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100 நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர் போராட்டக்காரர்கள்
100 நாட்களாக போராடியும் கண்டுக்கொள்ளாத அரசை கண்டித்தும், போராட்டக் காரர்கள் மீது கவனம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முயற்சி செய்தனர். அனால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு எற்பட்டது
மோதல் கொஞ்சம் அதிகமாகவே அது பெரிய கலவரமாக மாறியது. அப்போது அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.பின்னர் தீ விட்டு உள்ளனர்.பின்னர் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்
"தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்தும், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தும் எரித்தனர். மேலும் வாகன கண்ணாடி மற்றும் அலுவலக கண்ணாடிகளை உடைத்தனர். பின்னர் அவர்கள் சட்ட விரோத கும்பல் என அறியப்பட்டது.
மேலும்தூத்துக்குடியில் அமைதி நிலவ மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளனர்