கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.... நிபா வைரஸால் பலியான நர்ஸ்  லினி எழுதியது என்ன தெரியுமா?

 
Published : May 23, 2018, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.... நிபா வைரஸால் பலியான நர்ஸ்  லினி எழுதியது என்ன தெரியுமா?

சுருக்கம்

lini wrote the letter to her husband

கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.... நிபா வைரஸால் பலியான நர்ஸ்  லினி எழுதியது என்ன தெரியுமா?

கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்.

இவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நர்ஸ் லினியும் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார்

நேற்று முன்தினம் பெரம்பரா தாலுகா ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த 28 வயது லினி என்ற நர்ஸ் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை தான் பணி புரியும் பேரம்பரா தாலுகா  மருத்துவ மனைக்கு வழக்கம்போல பணிக்கு மாலை 6 மணிக்கு சென்றார்.

பாதிக்கப்பட்டவர்களு சிகிச்சை அளித்த லினி

நிபா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த 3 நபர்களுக்கு லினி அன்று இரவு முழுக்க அவர்கள் அருகிலிருந்தே கவனித்து வந்துள்ளார்

அன்று மறுநாளே லினிக்கு பரவி உள்ளது. பின்னர் கடும் காய்ச்சல் தலைவலியால் பதிக்கப்பட்ட நர்ஸ் லினி அவரை கோழிக்கொடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

அவருக்கும் மருத்துவம் பார்த்த மருத்துவர்களிடம் தனக்கு நிபா வைரஸ் தாக்கி உள்ளது  என்பதை தெரிவித்து தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்குமாறு கேட்டு உள்ளார்

பின்னர் இவரை பார்க்க லினியின்  சகோதரிகளும், தாயாரும் வந்துள்ளனர். ஆனால்  எங்கு நோய் அவர்களுக்கும் தோற்றி விடுமோ என எண்ணி அவர்களை பார்க்காமல் தவிர்த்து  உள்ளார்

பஹ்ரைனில் உள்ள தான் கணவர்

மேலும் மருத்துவமனைக்கு வேலின் செல்லும் போதே வழியில், பஹ்ரைனில் வசிக்கும் தன் கணவர் சஜீசுடன் வீடியோ கால் மூலம் பேசி உள்ளார்

ஆனால் கணவரிடம் தனக்கு காய்ச்சல் அதிகரித்து உள்ளதை பற்றி தெரிவிக்காமல்  இருந்துள்ளார்

எனினும் அதிர்ச்சி அடைந்த லினியின் கணவர் உடனடியாக  அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். பின்னர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த லினியை சந்தித்தார் கணவர். நேரில் பார்த்து துடித்து போயுள்ளார் கணவர். அதுவே இவர்களின் கடைசி சந்திப்பாக அமைந்துவிட்டது

கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம்

கணவரை நேரில் பார்க்க முடியுமா அல்லது அதற்கு முன்னதாகவே இறந்து விடுவோமா என்ற எண்ணத்தில் தன் இறப்பை முன்கூட்டியே தெரிந்துக்கொண்ட லினி, கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்

அந்த கடிதத்தில்,

"அன்பான கணவருக்கு, இனி உங்களை சந்திக்க முடியாத இடம் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.....ஆனால் உங்களை ஒருமுறையாவது நேரில் பார்த்து விட  வேண்டும் என்று ஆசையாக உள்ளது

என்னை உயிருடன் பார்க்க முடியாமல் போனால் அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம்..என்னை மன்னித்து விடுங்கள்..நமது குழந்தைகளையும் பஹ்ரைன் அழைத்து செல்லுங்கள்.

நமது பெற்றோர் போல அவர்களும் பிரிந்து இருக்க கூடாது ..நீங்கள் எங்கு சென்றாலும் அவர்கள் உங்களுடனே இருக்க வேண்டும் ..அவர்களை பத்திரமாக கவனித்துக்  கொள்ளுங்கள்... உங்களுக்கும் குழந்தைகளுக்கும் அன்பான முத்தங்கள் .....

இவ்வாறு அந்த கடிதத்தில் லினி எழுதியுள்ளார்.

உடல் புதைப்பு

லினி சஜீஸ் தம்பதிகளுக்கு ஹிர்த்துல் மற்றும் சித்தார்த் என்ற என்ற பிள்ளைகள் உள்ளனர்

கைக்குழந்தை சித்தார்த்துக்கு வியாழக்கிழமை மாலை பால் புகட்டிவிட்டு தான் பணிக்கு சென்று உள்ளார் லினி....

இதற்கிடையில் நடத்த இந்த விதியால், உயிரை இழந்துவிட்டார் லினி. அவரது சொந்த ஊருக்கு உடலை எடுத்து சென்றால் உறவினர்கள் பயப்படுவார்கள் என்பதால்   கோழிகோட்டிலேயே உடல் புதைக்கப்பட்டு உள்ளது.

பின்னர், தன் வீட்டில் இரண்டு குழந்தைகள் தன் தாய் இல்லை என்பதை உணராமல் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், மனைவி எழுதிய கடிதத்தை  படித்து படித்து கண்ணீர் விட்டு வருகிறார் சுஜீஸ்

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!