மீண்டும் சென்னைக்கு வந்ததா ஏலியனின் பறக்கும் தட்டு..! வானத்தில் தோன்றிய மர்ம ஒளியால் மக்கள் அச்சம்

Published : Sep 14, 2023, 09:07 AM IST
மீண்டும் சென்னைக்கு வந்ததா ஏலியனின் பறக்கும் தட்டு..! வானத்தில் தோன்றிய மர்ம ஒளியால் மக்கள் அச்சம்

சுருக்கம்

சென்னையில் இசிஆர் பகுதி வானத்தில் மர்மமான 4 பறக்கும் தட்டுகள் ஏற்கனவே வந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று இதே போன்று தாம்பரம் பகுதியில் வானத்தில் 4 மர்ம ஒளி தோன்றியது பொதுமக்களை அச்சம் அடையவைத்துள்ளது.  

வேற்று கிரகவாசிகள் - பறக்கும் தட்டு

வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா.? பறக்கும் தட்டு ஒன்று உள்ளதா.? என பல வித கேள்விகள் மக்கள் மத்தியில் எழும். ஆனால் இதற்கு எந்தவித உரிய பதிலும் இன்னும் கிடைக்காத நிலை தான் உள்ளது. இதனை மையமாக வைத்து பல ஹாலிவுட் படங்களும் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படங்களும் மக்களை வெகுவாக கவர்ந்து சக்கை போடு போட்டுள்ளது. ஏலியன் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆய்வு செய்து வருகிறது. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பாக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் ஒரே மாதிரியான நான்கு பறக்கும் தட்டுகளை கண்டதாக  ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் தெரிவித்திருந்தார். 

வானில் தோன்றிய மர்ம ஒளி

மேலும்,அவர் கூறுகையில், அந்த பறக்கும் தட்டு டிரோன்கள் போல் இல்லையென தெரிவித்தார். மேலும்  20 முதல் 25 விநாடிகளுக்குள் மறைந்துவிட்டதாக கூறியிருந்தார். இந்த தகவல் வின்வெளி ஆராய்ச்சியாளர்களிடம் ஆர்வத்தை தூண்டியது. இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது சென்னை தாம்பரம் பகுதியில் நேற்று இரவு மர்ம ஒளி ஒன்று அந்த பகுதியில் தெரிந்தது பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு  ஏழு மணி அளவில் மேகமூட்டமாக இருந்துள்ளது.  அந்த நேரத்தில் வானத்தில் அதிக வெளிச்சத்துடன் ஒளி  அங்குமிங்கும் சென்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். 

வானில் தோன்றிய மர்ம வெளிச்சம் என்ன.?

பின்னர் தங்கள் செல்போன்களில் அதை படம் பிடிக்கத் தொடங்கினர்.  படம் பிடிக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் அந்த ஒளி ஒரு சேர ஒரு நேர்கோட்டில் வந்து நின்று கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. இது பறக்கும் தட்டு என அப்பகுதி மக்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் இந்த தகவலை வின்வெளி ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர். யாரோ ஒரே நேரத்தில் டார்ச்லைட் அடித்த வெளிச்சம் போல் இருப்பதாகவும், பறக்கும் தட்டாக இருக்க வாய்ப்பு இல்லையெனவும் தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

சென்னை அருகே பரபரப்பு.. வானத்தில் ஒரே நேரத்தில் தோன்றிய 4 பறக்கும் தட்டு.? வந்தது வேற்றுக்கிரகவாசிகளா..?
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்