அனைத்து துறைகளிடம் இருந்து ஒப்புதல்கள் பெறப்பட்ட பின்னர் தான் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.
அனைத்து துறைகளிடம் இருந்து ஒப்புதல்கள் பெறப்பட்ட பின்னர் தான் பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. மெரினா கடற்கரையில் மறைந்த கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அதற்கு தடைகோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: சொத்துவரியை உடனே செலுத்த வேண்டும்... சொத்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி!!
இந்த வழக்கில் தமிழ்நாடு பொதுப்பணி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. அதில், கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்திலும், மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவிலும் பேனா சிலை அமைக்கப்படுகிறது. பேனா அமைக்க அனுமதிக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம்... உத்தரவு பிறபித்தது தமிழக அரசு!!
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் பரிந்துரைகள் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அனைத்து துறைகளிடம் இருந்து ஒப்புதல்கள் பெறப்பட்ட பின்னர் தான் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பேனா சின்னம் அமைக்க ஒப்புதல் கோரி மத்திய மற்றும் மாநில அரசு துறைகளிடம் விண்ணப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.