சொத்துவரியை உடனே செலுத்த வேண்டும்... சொத்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி!!

Published : Feb 03, 2023, 09:23 PM IST
சொத்துவரியை உடனே செலுத்த வேண்டும்... சொத்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி!!

சுருக்கம்

நிலுவை சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

நிலுவை சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 5.93 லட்சம் பேர் 50 ஆயிரம் ரூபாய்க்குள் சொத்துவரி நிலுவை வைத்துள்ளனர். அவர்கள் அனைவரின் சொத்து வரிஉ நிலுவை 346.63 கோடி ரூபாயாக உள்ளது. சொத்து உரிமையாளர்கள் நிலுவகை வைத்துள்ள சொத்துவரியை செலுத்தக் கோரி தபால் துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

இதையும் படிங்க: மினி பேருந்து மீது லாரி மோதி விபத்து; போதையில் தள்ளாடிய ஓட்டுநர் கைது

அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள நிலுவைத் தொகையினை, சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியை எளிதாக செலுத்தும் வகையில் நோட்டீஸில் உள்ள கியூ.ஆர். கோட்டை ஸ்கேன் செய்து செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியினை பயன்படுத்தி நிலுவை சொத்துவரியினை செலுத்தலாம்.

இதையும் படிங்க: திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம்... உத்தரவு பிறபித்தது தமிழக அரசு!!

மேலும், சொத்துவரியினை வரி வசூலர், இணையதளம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், கைபேசி செயலி  மற்றும் கூகுல் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செய்லிகள் வாயிலாகவும் செலுத்தலாம்.  சொத்துவரியிகை செலுத்த தவறும் சொத்து உரிமையாளர்களின் சொத்துக்கள் மீது சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன்படி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!