விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார்.! விரைவில் வெளியே வருவார்- பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

By Ajmal Khan  |  First Published Feb 13, 2023, 12:06 PM IST

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்பதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்வதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.


பிரபாகரன் நலமோடு உள்ளார்

தஞ்சாவூர் விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து முக்கியமான அறிவிப்பை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட இருப்பதாக  வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக பரபரப்பு சூழல் ஏற்பட்ட நிலையில்  உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது .சர்வதேசச் சூழலும், இலங்கையில் ராஜபட்ஷே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். 

Tap to resize

Latest Videos

ஆங்கிலத்தில் படிக்க

LTTE chief Prabhakaran alive, will appear before public soon: Ex-Congress leader Nedumaran's massive claim

 

குடும்பத்தினர் ஒப்புதலோடு தகவல்

இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். பிரபாகரன் அவர்கள் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது அந்த தொடர்பு மூலம் நான் அறிந்த செய்தியை அவர்கள் அனுமதியுடன் தற்போது தெரிவித்திருக்கிறேன் என கூறினார்.

மலையாளத்தில் படிக்க..

എല്‍ടിടിഇ പ്രഭാകരന്‍ ജീവനോടെയുണ്ട്, തിരിച്ചുവരുമെന്ന അവകാശവാദവുമായി പി നെടുമാരന്‍

இந்தியாவிற்கு எதிராக செயல்பட அனுமதிக்கவில்லை

விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். 

தெலுங்கில் படிக்க..

ఎల్‌టీటీఈ నేత ప్రభాకరన్ బ్రతికే ఉన్నారు.. ప్రజల ముందుకు వస్తారు: నెడుమారన్ సంచలన వెల్లడి

தமிழக மக்கள் ஒன்றினைந்து நிற்க வேண்டும்

தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்திய கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்வதாக பழ.நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்

இதையும் படியுங்கள்

எரிமலை போன்றவர் ஓபிஎஸ்.. உடனே வெடிக்க மாட்டார்.. வெயிட் அண்ட் சீ.. மருது அழகுராஜ்..!
 

click me!