பாலியல் மன்னன் பாதிரியார் பெனட்டிக் ஆன்டோ அதிரடி கைது

By Velmurugan s  |  First Published Mar 21, 2023, 10:27 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பாதிரியார் பெனட்டிக் ஆன்டோவை சைபர் கிரைம் காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனட்டிக் ஆன்டோ (வயது 29). இவர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார். 

இந்த நிலையில் பாதிரியார் பெனட்டிக் ஆன்டோ பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. மேலும், சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

Latest Videos

undefined

இளம் பெண்களை ஏமாற்றிய பாதிரியார்... லேப்டாப் முழுவதும் ஆபாசப் படங்கள்!

இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் புகார் பாலியல் அளித்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரில், பெனடிக்ட் ஆன்றோ பேச்சிப்பாறை சர்ச்சில் பாதிரியாராக இருந்த சமயத்தில் புகாரளித்த பெண் பிரார்த்தனைக்காக சென்றதாகவும், அப்போது பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும். உடலில் மோசமாக தொட்டதாகவும். பின்னர் வாட்ஸ் அப் மூலம் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பியதாகவும். அவரது அந்தரங்க உறுப்புக்களை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் அந்த இளம் பெண் புகாரில் கூறி உள்ளார். 

இதனை அடுத்து பாதிரியார் தலைமறைவானார் அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் தேடி வந்தனர். மேலும் அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது லேப்டாபில்  பல ஆதாரங்கள் இருப்பதால் லேப்டாப்பை பறிமுதல் செய்ய காவல் துறையினர் முயற்சி மேற்கொண்டு இருந்த நிலையில் இன்று  பாதிரியார் பெனடிக் ஆன்டோவை நாகர்கோவிலில் வைத்து சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர், இதனை அடுத்து எட்டு மணி நேரமாக நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவு அலுவலகத்தில் பாதிரியார் பெனட்டிக் ஆண்டோவிடம் விசாரணை நடந்தது.

தமிழகத்தில் திடீரென அதிகரிக்கும் கொரோனா.. அடுத்து என்ன செய்யலாம்? அவசர ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

click me!