தமிழக அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு விவரம்... மக்களுக்கான கையேட்டை வெளியிட்டது தமிழக அரசு!!

Published : Mar 21, 2023, 12:22 AM ISTUpdated : Mar 21, 2023, 12:24 AM IST
தமிழக அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு விவரம்... மக்களுக்கான கையேட்டை வெளியிட்டது தமிழக அரசு!!

சுருக்கம்

தமிழக அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு செலவு கையேடு குடிமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு கையேடு குடிமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (20.03.2023) தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு தமிழக அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு கையேடு குடிமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

வரவு - செலவுத்‌ திட்டத்தின்‌ பொருண்மைகள்‌

  • பெண்கள் முன்னேற்றம்
  • திறன் மேம்பாடு மற்றும்‌ வேலை வாய்ப்பளித்தல்‌
  • விளிம்பு நிலையில் உள்ளோரின்‌ சமூக- பொருளாதார முன்னேற்றம்‌
  • அனைத்து தளங்களிலும்‌ சமூக நீதியை உருவாக்குதல்‌
  • சமச்சீர் வளர்ச்சியினை எய்துதல்‌

இதையும் படிங்க: அறநிலையத்துறை பள்ளிகளில் இந்து சமய கல்வி கட்டாயம்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

வரவு- செலவுத்‌ திட்டத்தின்‌ மொத்த மதிப்பு

  • மொத்த செலவினங்கள்‌ ₹ 3,65,321 கோடி
  • மொத்த வரவினங்கள்‌ ₹ 2,73,246 கோடி 

மாநிலத்தின்‌ வருவாயினங்கள்‌:

2023-24 ஆம்‌ ஆண்டுக்கான வருவாய்‌ வரவினங்கள்‌ 2,70,515 கோடி ரூபாயாக அரசு மதிப்பீடு செய்துள்ளது. இது 2022-23 ஆம்‌ ஆண்டை விட (திருத்த மதிப்பீடுகள்‌)10.1 சதவீதம்‌ அதிகமாகும்‌. அரசின்‌ சொந்த வரிகள்‌ வாயிலாக பெறப்படும்‌ வருவாய்‌ 19.3 சதவீதம்‌ உயரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தூத்துக்குடி ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

மாநிலத்தின்‌ செலவினங்கள்‌:

2023-24 ஆம்‌ ஆண்டிற்கான அரசின்‌ மொத்த செலவினங்கள்‌ 3,65,321 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 (திருத்த மதிப்பீடுகள்‌, ஆம்‌ ஆண்டை விட 13.7 சதவீதம்‌ அதிகமாகும்‌. வருவாய்ச்‌ செலவினங்கள்‌ பெருமளவில்‌, ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்‌ திட்டங்களுக்காக செலவினங்கள்‌ மேற்கொள்ளப்படுகின்றன.

மூலதனச்‌ செலவினங்கள்‌:

மூலதனப்‌ பணிகளுக்கு செலவிடூவதன்‌ மூலம்‌ பொருளாதார வளர்ச்சிக்கான உத்வேகத்தை அரசு அளிக்கும்‌. 2023-24 ஆம்‌ ஆண்டிற்கான மூலதனச்‌ செலவு 44,366 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 (திருத்த மதிப்பீடுகள்‌) ஆம்‌ ஆண்டை விட 15.7 சதவீதம்‌ அதிகமாகும்‌.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!