
ஆத்தூர்
சேலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் கணவன், மனைவியாய் தஞ்சம் அடைந்தனர்.
ஆத்தூர் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகள் வளர்மதி (25). பொறியியல் படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சீலியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுருட்டையனின் மகன் செல்வராஜ் (26). பொறியியலாளர். இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இருவரும் சேலத்தில் வெவ்வேறு கல்லூரிக்கு படிக்க செல்லும் போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து செல்வராஜ், வளர்மதி ஆகியோர் நேற்று வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், பாதுகாப்பு கேட்டு கணவன், மனைவி இருவரும் மல்லியக்கரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இது தொடர்பாக இவர்களின் பெற்றோரை அழைத்து காவலாளர்கள் சமாதானம் செய்து அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.