பள்ளிகளின் மீது 72 சதவீத பெற்றோர்களுக்கு நம்பிக்கை இல்லை குழந்தைகள் கொலை, பாலியல் பலாத்காரம் எதிரொலி- கருத்துக்கணிப்பில் பகீர்

Asianet News Tamil  
Published : Sep 16, 2017, 05:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
பள்ளிகளின் மீது 72 சதவீத பெற்றோர்களுக்கு நம்பிக்கை இல்லை  குழந்தைகள் கொலை, பாலியல் பலாத்காரம் எதிரொலி- கருத்துக்கணிப்பில் பகீர்

சுருக்கம்

parents does not have any confident on school

குழந்தைகள் கொலை, பாலியல் பலாத்காரம் எதிரொலி- கருத்துக்கணிப்பில் பகீர்

குர்கான் ரியான் பள்ளியில் 7-வது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பள்ளிகளின் மீது 72 சதவீத பெற்றோர்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதாக கருத்தில் கணிப்பில் தெரியவந்துள்ளது.

குர்கான் ரியான் பள்ளியில் சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஸ்கூல் லேனர்ஸ் நெட்வொர்க்(எஸ்.எல்.என்.) என்ற அமைப்பு சமீபத்தில் 300 பெற்றோர்கள் மற்றும் 130 பள்ளிகளின் லீடர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகளை சமீபத்தில் வௌியிட்டது.

அதில், கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட பெற்றோர்களில் 72 சதவீதம் பேர், பள்ளியில் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்தனர்.

இதில் கலந்து கொண்ட ஸ்கூல் லீடர்களில் 63 சதவீதம் பேர், குர்கான் பள்ளி சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்துவிட்டது, பள்ளி விவகாரங்களில் பெற்றோர்களின் தலையீடு அதிகமாக இருக்கிறது என்றனர். 

பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பள்ளியின் முதல்வர்தான் முதல் பொறுப்பு என்று 44 சதவீதம் பெற்றோர்களும், பள்ளி நிர்வாகம்தான் பொறுப்பு என  62 சதவீதம் ஸ்கூல் லீடர்களும் தெரிவித்துள்ளனர். மேலும், 11 சதவீதம் ஸ்கூல் லீடர் , பள்ளியில் முதல்வருக்கே பொறுப்பு என்றும், பள்ளி அறங்காவலர்குழு தான் பொறுப்பு என 7 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களையே அதிகமாக நம்புவதாக பெரும்பாலான பெற்றோர்கள் அதாவது 59 சதவீதம் பேர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஸ்கூல் லேனர்ஸ் நெட்வொர்க்(எஸ்.எல்.என்.) அமைப்பின் இணை நிறுவனர் பிரான்சிஸ் ஜோசப் கூறுகையில், “ ஒரு பள்ளியில் எந்த வெற்றிக்கும் பின்னணியில் இருப்பது பெற்றோர்கள் மற்றும்  பள்ளி நிர்வாகிகள் என்ற இரு முக்கியத் தூண்கள். இருவரும் இணைந்து செயல்பட்டால் தான் குழந்தைகளின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்க முடியும். பெற்றோர்கள், நிர்வாகிகள்  இடையே உறவுகள் வலுப்படுவது அவசியம்’’ என்றார்.

மும்பை மஜ்கான் பகுதியில் உள்ள புனித மேரி உயர் நிலைப்பள்ளியின் முதல்வரும், பாதிரியாருமான பிரான்சிஸ் சுவாமி கூறுகையில், “ பள்ளியின் முதல்வரும், நிர்வாகம் மட்டும் தனித்து பள்ளியை இயக்க முடியாது. பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் உத்வேகத்துடன், ஈடுபாட்டுடன் அனைத்து நிலைகளிலும் செயல்படுவது அவசியம். அவர்களின் ஆலோசனைகள், புகார்களைப் பெற்று அதற்கு ஏற்றார்போல் செயல்படுவோம். பெற்றோர்களிடம் பள்ளிநிர்வாகம் வௌிப்படையாக தொடர்பில் இருப்பது முக்கியம்’’ என்றார்.

PREV
click me!

Recommended Stories

ஓபிஎஸ் கூடாரத்தை மொத்தமாக வாரி சுருட்டிய திமுக.. இன்று திமுகவில் ஐக்கியமாகும் வைத்திலிங்கம்
புதுக் கட்சி ஆரம்பிக்கும் காளியம்மாள்..? ரூட் போட்டுக் கொடுத்த பாஜக.. இபிஎஸ் எடுத்த இறுதி முடிவு..!