
ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ ..!
இயக்குனர்ஷங்கரும், கமல்ஹாசனும் முதன் முதலாக இணைந்த ‘இந்தியன்’ படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. எப்பொழுதுமே வெற்றிபெற்ற படங்களின் பின்னணியில், அதனுடைய இரண்டாம் பாகமும் நல்ல ஒரு வெற்றியை தந்திருக்கிறது .
அந்த வரிசையில் இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, இந்தியன் 2 பட இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அதற்கு முன்னதாக, டைரக்டர் ஷங்கர் அஜித்தை வைத்து படம் எடுக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியது. இந்நிலையில், கமலை வைத்து தான்‘எந்திரனி’ன் இரண்டாம் பாகமாக ‘2.0’ படத்தை இயக்கி வரும் ஷங்கர் அடுத்து ‘இந்தியன்-2’ வை இயக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
நடிகர் கமல் தற்போது தமிழக அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் படம் நடிப்பாரா அல்லது அரசியலில் குதிப்பாரா கமல் என்ற சந்தேகம் எழுந்துள்ளது