பிள்ளைகளுக்கு துணையாக போராட்டத்தில் இறங்கிய பெற்றோர்கள்…

Asianet News Tamil  
Published : Jan 20, 2017, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
பிள்ளைகளுக்கு துணையாக போராட்டத்தில் இறங்கிய பெற்றோர்கள்…

சுருக்கம்

திருச்சி

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டாவுக்கு தடை கோரியும் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி திருச்சி நீதிமன்றம், எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று முன் தினம் காலை தொடங்கிய கல்லூரி மாணவ - மாணவிகள் போராட்டம் இரவிலும் தொடர்ந்து விடிய, விடிய நடந்தது.

இந்த நிலையில் போராட்ட களத்தில் அமர்ந்து இருந்த மாணவ, மாணவிகளுடன் நேற்று காலை மேலும் பல கல்லூரிகளில் இருந்து வந்த மாணவ - மாணவிகளும் கலந்து கொண்டு மூன்றாவது நாளாக தொடர்கிறது.

நேற்று இரவு இரண்டாவது நாளாக மாணவர்கள் சாலையில் அமர்ந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் சல்லிக்கட்டு ஆர்வலர்கள், பல்வேறு நிறுவனங்கள் சார்பில் வாகனங்களில் கொண்டு வந்து அவ்வப்போது தண்ணீர் பாக்கெட்டுகள், பிஸ்கட் மற்றும் உணவு போன்றவற்றை வழங்கி தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.

இரவில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது தூக்கத்தை பற்றியும் கவலைப்படாமல் மாணவ, மாணவிகள் பேசிக்கொண்டும், ஆடி பாடி உற்சாகப்படுத்திக் கொண்டும் இருந்தனர்.

சல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்க எத்தனை இரவுகள் ஆனாலும் நாங்கள் காத்து கிடப்போம், எங்கள் அறவழி போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் உற்சாகத்துடம் கூறினார்கள்.
மாணவிகள் அமர்ந்து இருந்த பகுதிகளில் அவர்களது பெற்றோரும் தம்பி, தங்கை என குழந்தைகளுடன் வந்து அமர்ந்தனர். இதனால் ஏராளமான பெண்களையும் போராட்ட களத்தில் காண முடிந்தது.

மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக ஏராளமான காவலாலர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி