அரைநூற்றாண்டை நிறைவு செய்த பாண்டியன் எக்ஸ்பிரஸ்: நீராவி எஞ்சின் முதல் டீசல் எஞ்சின், மீட்டர் கேஜ் முதல் பிராட் கேஜ்: கேக் வெட்டி பயணிகள் உற்சாகம்

By Selvanayagam PFirst Published Oct 3, 2019, 6:35 AM IST
Highlights

மதுரையில் இருந்து ெசன்னைக்கும், சென்னையில் இருந்து மதுரைக்கும் நாள்தோறும் செல்லும் பாண்டியன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தனது 50 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளது. இதற்காக பயணிகள் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சி தெரிவித்தனர்

சுதந்திரம் பெறுவதற்கு முன் மதுரையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கொல்லம் மட்டும் ரயில் இருந்தது. ஆனால், மதுரை முதல் சென்னைக்கு ரயில் ேதவை என மக்கள் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த 1969-ம் ஆண்டு மதுரை முதல் சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நீராவி எஞ்சினில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியாற்றிய 76 வயதான ஓட்டுநர் தேவராஜ் கூறுகையில், “ மதுரை முதல் சென்னை வரை முதன் முதலில் நீராவி எஞ்சினில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஓட்டிய காலம் மறக்க முடியாத நினைவுகள். நீண்டகாலமாக விடுக்கப்பட்ட கோரிக்கையால் 1969-ல் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

சிங்கில் ஸ்டீம் எஞ்சின் 9 பெட்டிகள் வரைதான் இழுக்க முடியும், அதன்பின் இரட்டை ஸ்டீம் எஞ்சின் ரயில் வந்தது. இந்த ரயில் 18 பெட்டிகளை இழுக்கும். கடந்த 1974-ம் ஆண்டு ஸ்டீம் எஞ்சின் நீக்கப்பட்டு டீசல் எஞ்சன் வழங்கப்பட்டது. அதன்பின் மீட்டர் கேஜ் ரயில்பாதை நீக்கப்பட்டு அகலரயில்பாதை போடப்பட்டது. அதன்பின் 22 பெட்டிகள் ஓடுகின்றன. இப்போது எடைகுறைவான பெட்டிகளும் வந்துவிட்டன.

நாங்கள் ரயில் ஓட்டும்போது வேகம் அதிகம் இருக்காது 13 நேரம் ஆகும், ஆனால், இப்போது 120 கிமீ வேகத்தில் சென்று 7 மணிநேரத்தில் அடைந்துவிடுகிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. டீசல் எஞ்சின் வந்தபின்புதான் ரயில் வேகமெடுத்தது” எனத் தெரிவித்தார்

மதுரையில் உள்ள ரயில்நிலையத்தில் பிளாட்பார்ம் எண் 1-ல் பயணிகள், ரயில் நிலைய மேலாளர் லெனனின், மதுரை எம்.பி. சு வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி 50-வது ஆண்டு கொண்டாடப்பட்டது. டிக்ெகட் பரிசோதகர்கள், பயணிகளுக்கும் கேக் வெட்டி கொடுக்கப்பட்டது. மேலும் பயணிகளுக்கு எளிய போட்டி தெற்கு ரயில்வே சார்பில் நடத்தப்பட்டு வெற்றி பெற்றபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

click me!