
திருப்பூரில் மதுபானக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை தாக்கிய ஏ.எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு வழங்கியுள்ளது தமிழக அரசு.
கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை திருப்பூர் கூடுதல் எஸ்.பி. பாண்டியராஜன் சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். இதில் ஈஸ்வரி பெண்ணுக்கு காது கேட்காமல் போனது.
பாண்டியராஜன் உத்தரவின்படி அங்கிருந்தவர்கள் மீது காவல்துறையினர் கடும் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை தாக்கிய இந்த சம்பவம் வீடியோ காட்சி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஏ.எஸ்.பி.பாண்டியராஜனுக்கு எஸ்பியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.