திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உள்பட 4 பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் பகுதி அருகே உள்ள கள்ளகிணறு என்ற பகுதியில் வசித்து வந்த மோகன்ராஜ், ரத்தினாம்பாள், புஷ்பாவதி மற்றும் செந்தில்குமார் ஆகிய நான்கு பேர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோகன்ராஜ், ரத்தினாம்பாள் மற்றும் புஷ்பாவதி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
திருப்பூரில் வசித்து வந்த செந்தில்குமார் தவிடு மற்றும் புண்ணாக்கு விற்பனை செய்து வரும் ஒரு நபர் ஆவார். இந்நிலையில் அவரிடம் தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்கின்ற குட்டி என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில் குட்டி என்கின்ற அந்த வெங்கடேசனை பணியில் இருந்து நீக்கியுள்ளார் செந்தில்குமார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், செந்தில்குமார் வீட்டின் அருகே அமர்ந்து தனது கூட்டாளிகளுடன் மது அருந்தி உள்ளார். இதனை தட்டி கேட்ட நிலையில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், செந்தில்குமார் உடன் கடும் தகராறு ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது வாக்குவாதம் முற்றிய நிலையில் குட்டி என்கின்ற அந்த வெங்கடேசன், செந்தில்குமாரை மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு அவருடைய உறவினர்கள் வெளியே வந்த நிலையில் அவர்கள் மூவரும், வெங்கடேசனுடன் இருந்தவர்களால் வெட்டப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பல்லடத்தில் நால்வர் கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் அதிரடி கைது