
தமிழகத்தில் அண்மை காலமாக பல்வேறு சொற்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டு வருகிறது. உதாரணமாக ஊனமுற்றவர்கள் என்ற வார்த்தையை மாற்றி மாற்று திறனாளிகள் என்று அழைக்கப்பட்டது. அறவானிகள் என்ற பெயர் மாற்றப்பட்டு திருநங்கை என அழைக்கப்பட்டது. துப்புரவு பணியாளர்கள் என்ற வார்த்தை மாற்றப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் என்று மாற்றப்பட்டது. அந்த வகையில் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நபர்களை இனி நோயாளிகள் என்ற அழைக்கக் கூடாது என தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நபர்களை இனி நோயாளிகள் என்ற அழைப்பதற்க பதிலாக மருத்துவ பயனாளர்கள் என அழைக்க வேண்டும்” என்ற குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கருத்து தெவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரையின் போது பேசிய பழனிசாமி, “செயலாட்சி என்ற சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று பெயர் வைப்பது, மற்றொன்ற பெயரை மாற்றுவது. தயவு செய்து பெற்றோரை அன்போடு அழைக்கும் அப்பா, அம்மா ஆகிய சொற்களை மாற்றிவிட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
பழனிசாமியின் விமர்சனத்திற்க கருத்து தெரிவித்துள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என்ற அழைப்பதில் என்ன பிழை இருக்கிறது..? அவர்களை நோயாளிகள் என்று அழைக்கும் போது அவர்களுக்க மனதளவில் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அதனை தவிர்க்கவே முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதில் என்ன தவற இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.