சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டி – இந்தியாவிற்கு 339 ரன்கள் இலக்கு வைத்தது பாகிஸ்தான்....

First Published Jun 18, 2017, 6:56 PM IST
Highlights
Pakistan picked up 339 runs for India in the final of the Champions Trophy


சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்துள்ளது. 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்க உள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைத்தான் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அநேக பேர் அதிகம் எதிர் பார்ப்பார்கள்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை மோதிய 128 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி 72 போட்டிகளிலும், இந்திய அணி 52 போட்டிகளிலும் வென்றுள்ளன. 4 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.

இறுதிப் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை 14 போட்டிகளில் இந்திய அணி 5 போட்டிகளிலும், பாகிஸ்தானைப் பொறுத்தவரை 9 போட்டிகளில் 2 போட்டிகளிலும் வென்றுள்ளது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டி இன்று மாலை தொடங்கியது. சாம்பியன்ஸ் கோப்பை இறுதிபோட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை எடுத்தது பாகிஸ்தான் அணி. அதிகபட்சமாக ஃபக்கர் 114  ரன்களும், அசார் அலி 57 ரன்களும் எடுத்தனர்.

இந்திய பந்துவீச்சை பொருத்தவரை புவனேஸ்வர், ஜாதவ், பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து இந்தியாவிற்கு 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்க உள்ளது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

click me!