தந்தையர் தினத்தை இந்தியா பாகிஸ்தான் இறுதி மேட்சோடு கொண்டாடிய மு.க ஸ்டாலின்...!!!

 
Published : Jun 18, 2017, 06:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
தந்தையர் தினத்தை இந்தியா பாகிஸ்தான் இறுதி மேட்சோடு கொண்டாடிய மு.க ஸ்டாலின்...!!!

சுருக்கம்

dmk action leader m.k.stalin watch india v pakishtan final with his grandchildren on fathers day

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்தியா பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியை தனது பேரன்கள் மற்றும் பேத்திமார்களுடன் பார்த்து தந்தையர் தினத்தை கொண்டாடி வருகிறார்.

தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம்.

அதன்படி இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையர் தினம் கொண்டாடப்படும் இந்த நன்னாளில் மக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிபோட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இறுதிப் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை 14 போட்டிகளில் இந்திய அணி 5 போட்டிகளிலும், பாகிஸ்தானைப் பொறுத்தவரை 9 போட்டிகளில் 2 போட்டிகளிலும் வென்றுள்ளது.

அதனால் ஓவல் மைதானம் கண்டிப்பாக இந்தியாவிற்கு கைகொடுக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதன்படி பல்வேறு அரசியல் நடவடிக்கைகளுக்காக ஊர் ஊராக சுற்றி திரிந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்தியா பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியை தனது பேரன்கள் மற்றும் பேத்திமார்களுடன் பார்த்து தந்தையர் தினத்தை கொண்டாடி வருகிறார்.

 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!