சென்னையை விடாமல் துரத்தும் தீ விபத்து...!!! - இப்போது கிண்டி தனியார் வங்கியில்...

Asianet News Tamil  
Published : Jun 18, 2017, 05:29 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
சென்னையை விடாமல் துரத்தும் தீ விபத்து...!!! - இப்போது கிண்டி  தனியார் வங்கியில்...

சுருக்கம்

fire accident in chennai guindy private bank and fireman service is working at the place

சென்னை, கிண்டியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று, திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்து குறித்து, வேளச்சேரி தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது.

வேளச்சேரி மற்றும் துரைப்பாக்கத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து குறித்து பேசிய தீயணைப்புத்துறை அதிகாரி, வங்கியில் உள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள வங்கியில் திடீ தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

PREV
click me!

Recommended Stories

எங்களை தொட்டுப்பார்த்து விட்டார்... இனி விஜயை விட மாட்டோம்..! அதிமுக ஆவேசம்..!
ஓபிஎஸ்ஸை சேர்க்க முடியாது.. ஒரேடியாக கதவை அடைத்த இபிஎஸ்.. தர்மயுத்த நாயகனின் அடுத்த மூவ் என்ன?