
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் திருவள்ளுவர் சிலையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை 156 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு கவர்னர் தங்குவதற்கான மாளிகை,குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் அதற்காக பிரத்யேக மாளிகை, அவற்றைச் சுற்றி பச்சைப் போர்வை போர்த்தியது போல் புல் வெளிகள் அமைந்துள்ளன.
மேலும் 698 புள்ளி மான்கள், 198 அரிய வகை மான்கள், குரங்குகள் போன்ற விலங்கினங்களும் உள்ளன.
இதனிடையே விழா ஒன்றில் பேசிய ஆளுநர் ராஜ்பவனில் விரைவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் எனவும் சிலைகளில் உள்ள சுவடிகளில் நாம் எழுதினால் அதன் குரல் வடிவம் நமக்கு கேட்கும் வகையில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று கிண்டியில் உள்ள ராஜ்பவனில் திருவள்ளுவர் சிலையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசர்ராவ் திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.