அமெரிக்காவுக்கு சவால் விட்ட தமிழர்கள்; பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசிக்கு பத்மஸ்ரீ விருது!

By Raghupati RFirst Published Jan 26, 2023, 12:26 AM IST
Highlights

தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர்களான இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..பத்ம விருதுகள்: முலாயம் சிங் யாதவ், சுதா மூர்த்தி, கீரவாணி!.. யார் யாருக்கு விருது? முழு பட்டியல் !!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் இனத்தைச் சேர்ந்த வடிவேல் கோபாலும், மாசி சடையனும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று எண்ணிலடங்காத பாம்புகளை பிடித்துள்ளனர். முறையான கல்வியை பெறவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பயணம் செய்து பாம்புகளை பிடித்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சென்று பல்வேறு இடங்களில் பாம்புகளை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அதிகளவிலான பைத்தான் வகை மலைப்பாம்புகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றை கண்டு அங்குள்ள மக்களுக்கு பயம் அதிகமானதால், இத்தகைய பாம்புகளை பிடிக்க திட்டமிட்டனர் அமெரிக்க அதிகாரிகள். ஒருகட்டத்திற்கு மேல் முடியாததால், வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனை கூப்பிட்டது அமெரிக்கா.

இதையும் படிங்க..ORS கரைசல் கண்டுபிடித்த டாக்டர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது ! யார் இவர்.? முழு விபரம்

10 நாட்களில் 15 பைத்தான் பாம்புகளை பிடித்து கொடுத்து அசத்தியுள்ளனர். இவர்கள் உலகம் முழுவதும் இன்று வரை பாம்புகளை பிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாம்புகளை பிடிப்பதோடு மட்டுமல்லாமல், பல உயிர்களையும் காப்பாற்றி உள்ளனர்.

I am happy to know that Vadivel Gopal and Masi Sadaiyan, Snake catchers from the tribal community of Tamil Nadu, have been announced for receiving this year. My heartiest congratulations to them and other Padma awardees.(1/2) pic.twitter.com/Q8Y4lINfC8

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn)

இந்த நிலையில், தமிழகத்தின் இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பாளர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கும் மற்ற பத்ம விருது பெற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..முதல்வருக்கு திடீரென போன் போட்ட ஆளுநர் ஆர்.என் ரவி!.. ஆடிப்போன திமுக நிர்வாகிகள்! என்ன நடந்தது.?

click me!