
வேலூர் அருகே அரசு பேருந்தில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூர் அருகே ஆம்பூரில் அரசு பேருந்தில் பான் மசால பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக உணவுப் பாதுக்காப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலறிந்து வந்த அதிகாரிகள் ஆம்பூர் அரசு பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் அரசு பேருந்து ஒன்றில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பொருட்கள் கடத்த இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கிருந்த பான் மசால பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பான் பொருட்களை கடத்த முயன்றவர்களை தேடி வருகின்றனர்.