
கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறக்க இயலாது என்று ஆந்திர அரசு கூறியுள்ளது. அணைகளில் போதுமான நீர் இல்லாத நிலையில், ஆந்திர அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் நான்கு நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்துள்ளது. குடிநீருக்காக தவித்து வரும் வேளையில் ஆந்திர அரசு அறிவித்துள்ளது மேலும் வேதனையை அதிகரித்துள்ளது.
கண்டலேறு அணையில் இருந்து நீர் திறக்க இயலாது என்பது குறித்து ஆந்திர அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போதுள்ள நிலையில் கண்டலேறு அணையில் இருந்து நீர் திறக்க இயலாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் அணையின் நீர் இருப்பு 4.65 டி.எம்.சி. மட்டுமே உள்ளது. எனவே, 150 கி.மீ. தொலைவில் இருந்தாலும் சென்னைக்கு நீர் திறக்க இயலாத நிலையில் உள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.