பாலாற்று மணல் எப்படியெல்லாம் திருடு போகுது! வருவாய்துறையினரை பார்த்ததும் ஓட்டுநர் தப்பியோட்டம்...

 
Published : May 21, 2018, 09:15 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
பாலாற்று மணல் எப்படியெல்லாம் திருடு போகுது! வருவாய்துறையினரை பார்த்ததும் ஓட்டுநர் தப்பியோட்டம்...

சுருக்கம்

paalaru sand stealing Driver escape revenue department officers investigation

வேலூர்
 
வேலூரில் மணல் மீது வைக்கோல் பரப்பி சரக்கு ஆட்டோவில் கடத்தியவர் வருவாய்த்துறையினர் பார்த்ததும் தப்பியோடினார். வாகனத்தை பறிமுதல் செய்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக காணப்படும் பாலாறு தற்போது தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. பாலாற்றில் காணப்படும் மணல் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள், லாரி, சரக்கு ஆட்டோ போன்றவற்றின் மூலம் கடத்தப்படுகின்றது. 

பாலாற்றில் இருந்து மணல் அள்ளுவதால் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே, மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்று மக்கள், சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை வைத்து வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், ஆட்சியர் ராமன் உத்தரவின்பேரில் வேலூர் தாசில்தார் பாலாஜி மற்றும் வருவாய்த்துறையினர் வேலூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அப்போது, மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். மேலும், மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று வேலூர் தாசில்தார் பாலாஜி தலைமையில் மண்டல துணை தாசில்தார் விநாயகமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் வேலூர் சேண்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை அவர்கள் நிறுத்தி சோதனையிட முயன்றனர். வருவாய்த் துறையினரை கண்டதும் ஓட்டுநர் சாலையோரம் சரக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். அதனால் சந்தேகமடைந்த வருவாய்த்துறையினர் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். 

அதில், மணலின் மேல் பகுதியில் வைக்கோலை பரப்பி மணல் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு வேலூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

சரக்கு ஆட்டோவின் உரிமையாளர் மற்றும் தப்பியோடிய ஓட்டுநர் யார்? என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர் வருவாய்த்துறையினர்.

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!