சாலையில் மாடுகள் சுற்றித்திருந்தால் அபராதம்... உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

Published : Jun 15, 2022, 10:52 PM IST
சாலையில் மாடுகள் சுற்றித்திருந்தால் அபராதம்... உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

சுருக்கம்

மாடுகளை பொதுவெளியில் சுற்றித்திரிய விட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மாடுகளை பொதுவெளியில் சுற்றித்திரிய விட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையைாக மாடு ஒன்றுக்கு ரூ.1500 விதிக்கப்படுகிறது.

அதன்படி, மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர் அதை மாட்டு தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு மண்டலங்களிலும் கூடுதலாக 10 நபர்களை நியமித்து காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் கடந்த மாதம் 29 முதல் இந்த மாதம் 13 ஆம் தேதி வரை மொத்தம் 302 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1550 வீதம் ரூ.4,68,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சிக்குட்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைக்க வேண்டும். பொது வெளியில் திரிய விடக்கூடாது. மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும் போது, அந்த இடங்கள் குறித்து முன்கூட்டியே அந்தந்த மண்டல நல அலுவலர்களின் அனுமதி பெற வேண்டும். மீறி மாடுகளை பொதுவெளியில் விடும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டு காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாட்கள் விடுமுறை!