
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே வாலிபர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்கள் ரமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.