Chennai High Court: 5 வருடங்களாக ஒன்றும் பண்ணல.. 2 வாரம் தான் டைம்.. அரசை எச்சரித்த நீதிபதி..

Published : Feb 02, 2022, 06:59 PM IST
Chennai High Court: 5 வருடங்களாக ஒன்றும் பண்ணல.. 2 வாரம் தான் டைம்.. அரசை எச்சரித்த நீதிபதி..

சுருக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.  

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.இந்த வழக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி ஆதுகேசவலு ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு திட்டமும் வகுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அறிவியல் ரீதியாக அகற்றுவதற்காக, நிபுணர் குழு மற்றும் நீரி அமைப்பின் அறிக்கை கோரியுள்ளதாகவும், அவை கிடைத்தபின் முழுமையாக அகற்றுவது தொடர்பாக திட்டம் வகுக்க 6 மாத அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரை பாதிப்பது மட்டுமல்ல, நிலத்தையும் மலடாக்கி விடுகிறது என்பதால் அவற்றை வெறுமனே வெட்டுவது மட்டுமல்லாமல், வேரோடு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

2015ஆம் ஆண்டு தொடரபட்ட வழக்கில், 2017ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், 5 ஆண்டுகளாக முழுமையாக அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடும் அதிருப்தியை பதிவு செய்த நீதிபதிகள், குழுக்கள் மேல் குழுக்கள் அமைத்து அறிக்கை கேட்பதால் எந்த பலனும் இல்லை என தெரிவித்தனர்.

சமநிலையற்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக இரண்டு வாரங்களில் திட்டம் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் அமல்படுத்த வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியையோ அல்லது அரசு நிதி ஒதுக்கியோ பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 06 December 2025: Govt Job - ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
இந்த ஐந்து நாள் பயிற்சி போய்ட்டு வந்தாலே போதும்! கை நிறைய சம்பாதிக்கலாம்! உங்க லைஃப் டோட்டலா மாறிடும்!