அதிரடி..! போலீஸ் ஆகனுமா..? இந்த தேர்வு கட்டாயம்..அறிவித்தது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்..

Published : Feb 02, 2022, 04:58 PM ISTUpdated : Feb 02, 2022, 05:52 PM IST
அதிரடி..! போலீஸ் ஆகனுமா..? இந்த தேர்வு கட்டாயம்..அறிவித்தது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்..

சுருக்கம்

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் காவலர் பணிக்கான தேர்வுகளையும், உதவி ஆய்வாளருக்கான தேர்வுகளையும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், தேர்வு முறையில் சில மாற்றங்களை தேர்வாணையம் கொண்டு வந்துள்ளது. தமிழ் தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதன் பின்னர்தான் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வும், தமிழ் தகுதித் தேர்வும் ஒரே சமயத்தில் நடத்தப்படும் என்றும், அந்த தமிழ் தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணயம் தெரிவித்துள்ளது.

தமிழ் தகுதித் தேர்வில் குறைவான மதிப்பெண்களை எடுத்துவிட்டு, எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் காவலர் தகுதித் தேர்வுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதோடு, நிராகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தமிழ் தகுதித் தேர்வானது, 80 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் 20 நிமிடத்துக்கு நடத்தப்படும் எனவும் முக்கிய தேர்வான எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளருக்கான தேர்வுகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பணிகளில் சேர்பவர்கள் கட்டாயமாக தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி காவலர் பணிக்கான தேர்வு முறைகளில் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்களில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில், தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் கட்டாயம் தமிழ் மொழித்தான் இடம்பெறும் என்று தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிட்டது.

தமிழ் மொழித் தகுத் தாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணையம் செய்யப்படுகிறது.கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 06 December 2025: Govt Job - ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
இந்த ஐந்து நாள் பயிற்சி போய்ட்டு வந்தாலே போதும்! கை நிறைய சம்பாதிக்கலாம்! உங்க லைஃப் டோட்டலா மாறிடும்!