
ஜெயலலிதா இருந்திருந்தால் கியா மோட்டார் கம்பெனி ஆந்திரா போயிருக்குமா? கையாலாகாத எடப்பாடி…வறுத்தெடுத்த ஓபிஎஸ்…
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் எந்த ஒரு தொழிற்சாலையையாவது வேறு மாநிலங்களுக்கு போகவிட்டிருப்பாரா என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் எம்ஜிஆரின் 100 ஆவது பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய ஓபிஎஸ்,
அதிமுக என்ற மாபெரும் இயக்கம் 1972-இல் உருவாக்கப்பட்டு, எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். எம்.ஜி.ஆர். மறைந்தபோது 17 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக ஜெயலலிதாவின் உழைப்பால் ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக உருவானது.
அதிமுக தொண்டர்களின் இயக்கமாகச் செயல்பட்டு வரும். அதிமுக தனிப்பட்ட குடும்பத்துக்குள் சென்றுவிடக் கூடாது என்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பாடுபட்டனர். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு மாறிவிட்டது. அதை மீட்டெடுக்கும் தர்மயுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது தேர்தலில் அவர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத சூழல் தற்போது உள்ளதாக குற்றம்சாட்டினார்.
தமிழகத்துக்கு வரவேண்டிய மிகப் பெரிய கியா மோட்டார் தொழிற்சாலை தற்போது ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக குற்றம்சாட்டிய ஓபிஎஸ், ஜெயலலிதா முதலமைச்சரக இருந்திருந்தால், இது நடந்திருக்காது என வேதனையுடன் தெரிவித்தார்.
சேலம் உருக்காலையை அரசே வாங்கும் சூழலை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. என ஓபிஎஸ் தெரிவித்தார்.
நாங்கள் சசிகலாவின் குடும்பத்தை விட்டு வெளியே வாருங்கள் என்றுதான் கூறினோம். ஆனால், அவர்கள் தினகரனை வெளியேற்றியதாகக் கூறி நாடகமாடினார்கள் என குற்றறம்சாட்டினார்.
தனால் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பவர்கள் லட்சியப் பாதையில் செல்லும் எங்கள் பக்கம் வர வேண்டும் என ஓபிஎஸ் அழைப்புவிடுத்தார்.